india

img

எதிர்காலம் குறித்த கவலையில் இந்தியாவின் இளைய தலைமுறை.... லிங்க்டு-இன் ஆய்வில் தகவல்....

புதுதில்லி:
வேலைவாய்ப்பு விஷயத்தில் கொரோனா ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற தன்மை, 25 வயதிற்கு உட்பட்ட இந்தியாவின் இளைய தலைமுறையை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக ‘லிங்க்டு-இன்’ நிறுவன ஆய்வில் தெரியவந் துள்ளது.

அதிலும் குறிப்பாக, வேலைக்குச்செல்லும் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள், வேலை கிடைப் பது குறித்து இரண்டு மடங்கு அதிகம் கவலைப்படுகின்றனர் என்று கூறும் ஆய்வு, கொரோனா பெருந் தொற்றுக் காலம் இந்த கவலையை அதிகப்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.‘லிங்க்டு-இன்’ (LinkedIn) நிறுவனம் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களிடம் ‘வேலைவாய்ப்பு சூழல்’ குறித்த கருத்துக்கணிப்பை (Survey) அண்மையில் நடத்தியுள்ளது. 

அதில்தான், “வேலை கிடைப்பது, வேலைக்கான மக்கள் தொடர்புகள், வேலை தேடுவதற்கான நேரம்ஆகியவை குறித்து ஏற்கெனவே இந்தியப் பெண்கள், ஆண்களைவிட இரு மடங்கு அதிகம் கவலைப் படுகின்றனர். நான்கில் ஒரு பெண் தொழில் வல்லுநர் (23 சதவிகிதம்) அதிகரித்து வரும் செலவுகள் அல்லது கடன் குறித்து அதிகம் கவலைகொள்கிறார். ஆனால் இதுவே ஆண்களில் 10-இல் ஒருவர் மட்டுமே (13 சதவிகிதம்)கவலைப்படுகிறார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த வித்தியாசம் அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள் ளது.மேலும், “வேலைவாய்ப்பு சார்ந்த பெண் பணியாளர்களின் நம்பிக்கைக் குறியீடு மார்ச்சில் 57 புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது49 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. இதுவே ஆண் பணியாளர்களின் நம்பிக்கைக் குறியீடு மார்ச்சில் 58 ஆக இருந்தது ஜூன் மாதத்தில் 56 புள்ளிகள் என்ற அளவிற்கே மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பணியாளர்களின் நம்பிக்கை குறியீடு கடந்த மார்ச்சில்58 புள்ளிகளாக இருந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் 54 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பொழுதுபோக்கு, வடிவமைப்பு மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில்வேலைவாய்ப்பு சூழல் நிலையற்றதாக இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைசார்ந்த எதிர்காலத்தின்மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

வேலைக்குச் செல்லும் நடுத்தரவயதினர், வயது முதிர்ந்தோரைவிட- இளைஞர்கள் வேலையிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு, எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர். இன்றைய தலைமுறையினரில் 30 சதவிகிதம் பேரும், 2000-ஆவது ஆண்டுக்கு பிந்தைய தலைமுறையில் 26 சதவிகிதம் பேரும், அதற்கு முந்தைய தலைமுறையில் 18 சதவிகிதம் பேரும் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்’’ என்று ‘லிங்க்டு-இன்’ தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் விகிதம் ஏப்ரல் மாதத்தில் 10 சதவிகித அளவுக்குக் குறைவாக இருந்தது. இது மே மாத இறுதியில் 35 சதவிகித அளவுக்கு உயர்ந்தது. இவ்வாறு கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறையத்தொடங்கியுள்ள சூழலில்தான், இந்திய ஆண்களும் - பெண்களும் வேலை சூழல் குறித்த நம்பிக்கையின்மையை   வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் ‘லிங்க்டு-இன்’ சுட்டிக் காட்டியுள்ளது.

;