districts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை மாதர் சங்கம் நடத்திய ஆய்வில் தகவல்

மயிலாடுதுறை, ஏப்.10-  மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, சுகாதார நிலை யங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆய்வு நடை பெற்றது.  மயிலாடுதுறை தலைமை மருத்துவ மனை, சீர்காழி வட்ட மருத்துவமனை, பொறையார், தரங்கம்பாடி மருத்துவ மனைகள், ஆக்கூர் வட்டார மருத்துவ மனை, திருக்கடையூர், சங்கரன்பந்தல், மேலப்பெரும்பள்ளம் ஆகிய பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங் களில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சரிதா, மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா, மாவட்ட துணைச் செய லாளர் பி.என்.ராஜலெட்சுமி, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் ஜி. கலைச்செல்வி, உஷாராணி, பரிமளா, டி.ஆர்.ராணி, ஷண்முகவள்ளி, கண்ணகி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் அடங் கிய குழுக்களாக ஆய்வினை மேற் கொண்டனர்.  ஆய்வின் முடிவில், மயிலாடுதுறை தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் நோயாளிகளையும், உட னிருப்பவர்களையும் கேவலமாக பேசு வதாகவும், இரவு நேரங்களில் பணியில்  இருக்கும் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களை கூட அலட்சியமாக பார்ப்பதாகவும், ஒரு  சில ஒப்பந்த ஊழியர்கள் லஞ்சம் கேட்ப தாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.  விஷமருந்தி வருபவர்களுக்கு சாதாரண ஊழியர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். சீர்காழி மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை, ஆம்பு லன்ஸ் வசதியை சீர்செய்ய வேண்டும், திருக்கடையூர் மருத்துவமனையில் அனுமதி சீட்டு வழங்கும் இடமும், காயத்திற்கு கட்டு போடும் இடமும் மரத்தடியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  பொறையார் மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையும், ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு என பல பிரிவு களுக்கு கட்டிடங்கள் மட்டுமே உள்ளது.  ஆனால், எந்தவித உபகரணங்களும் இல்லை, இரவு நேரத்தில் மருத்துவர் இல்லை, ஆக்கூர் மற்றும் சங்கரன் பந்தலில்  மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை.  சங்கரன்பந்தலில் ஒரே ஒரு மருத்துவரே பணியில் உள்ளனர். மேலப்பெரும்பள்ளத்தில்  மருத்துவ மனைக் கட்டிடம் பழுதடைந்ததால் வாடகை கட்டிடத்திலேயே செயல்படு கிறது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள்  மாதர் சங்க ஆய்வில் தெரியவந்து உள்ளது.

;