india

img

ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் நீர் மேலாண்மை கழகத்தில் வேலை

ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய நீர் மேலாண்மை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்;

விளம்பர எண்.12/2022

பணி: Junior Engineer(Civil) - 02

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Junior Accountant - 01

சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

தகுதி: காமர்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Upper Division Clerk - 01

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்எஸ் வோர்ட், ஆபிஸ், எக்ஸல், பவர் பாயிண்ட் மற்றும் இண்டர்நெட் பிரிவில் கணினி அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Stenographer Grade-III - 03

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.840. எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2022

மேலும் விவரங்கள் அறிய  www.nwda.gov.in அல்லது https://nwda.cbtexam.in/Pdf/Full%20advertisement%20for%20the%20various%20post%20in%20NWDA%20vide%20Advt.%20No.%2012%20of%202022.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

;