india

img

காலத்தை வென்றவர்கள் : சுகதேவ் பிறந்த நாள்....

இந்திய விடுதலைக்காகப் போரிட்ட புரட்சி வீரரும், 24 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீரமரணம் அடைந்தவருமான சுகதேவ் பிறந்த தினம் இன்று. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் (1907) பிறந்தார்.முழு பெயர் சுகதேவ் தாபர்.3 வயதில்தந்தையை இழந்தார். யோகா பயிற்சிகள், மந்திரங்கள் கற்பதிலும்வல்லவராகஇருந்தார். தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தார். பள்ளி மாணவனாக இருந்த இவரை இங்கிலாந்து அரசின் ‘யூனியன் ஜாக்’ கொடிக்கு சல்யூட் அடிக்கச் சொன்னார்கள். விடாப்பிடியாக மறுத்து அடி, உதை, தண்டனையைப் பெற்றார்.

லாகூர் தேசியக் கல்லூரியில் 1920-ல் சேர்ந்தார்.அப்போது பகத்சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நட்புகொண்டார். இந்துஸ்தான் குடியரசுப் படையில் தன்னை இணைத்துக்கொண்டார்.  நாடாளுமன்றத்தில் குண்டு வீசியதுதொடர்பாக பகத்சிங் கைது செய்யப்பட்டார். காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் கொலை மற்றும் லாகூர் சதி வழக்குக்காக சுகதேவ் 1929-ல் கைது செய்யப்பட்டார்.லாகூர் மத்திய சிறையில் 15 நாட்கள் தண்ணீர்கூடகுடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.சிறையில் பகத்சிங் நடத்திய அனைத்துப்போராட்டங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பகத்சிங், ராஜகுருவுடன் இணைந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’என முழக்கமிட்டபடியே 1931 மார்ச் மாதம் 23ஆம் நாள்
தூக்கு கயிற்றை முத்தமிட்டார். 

- பெரணமல்லூர் சேகரன்

;