india

img

தலிபான்கள் குறித்து எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை.... இந்திய தனிநபர் முஸ்லிம் சட்டவாரியம் விளக்கம்...

புதுதில்லி:
“தலிபான்களுக்கு ஆதரவாக மவுலானா சஜத் நவுமனி பேசிய கருத்துகள் அனைத்திந்திய முஸ் லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்து அல்ல!” என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், “நிராயுதபாணியான ஒரு தேசம் வலிமையானபடைகளை தோற்கடித்தது. அவர் கள் காபூலின் அரண்மனைக்குள் நுழைந்தனர். அவர்களிடம் பெருமைஅல்லது ஆணவம் இல்லை. அவர்களிடமிருந்து பெரிய உரைகள்இல்லை. அந்த இளைஞர்கள் காபூலின் மண்ணில் முத்தமிடுகிறார்கள். வாழ்த்துக்கள். தொலைதூரத்தில் இருக்கும் இந்த இந்திய முஸ்லிம்உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். உங்கள் தைரியத்துக்கும், உங்கள் உத்வேகத்திற்கும் சல்யூட்” சஜத் நவுமனி குறிப்பிட்டிருந்தார்.நவுமனி அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் என்ற நிலையில், அவரின் மேற்கண்ட கருத்து வாரியத் தின் கருத்தாக ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் விளக்கம் அளித்துள்ளது.அதில், ‘ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் குறித்தோ அல்லது தலிபான்கள் குறித்தோ அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் எந்த விதமான கருத் தும் தெரிவிக்கவில்லை. வாரிய உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துகளை வாரியத்தின் கருத்துகள் போல சில ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. வாரியத்தின் மீது தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது. இந்தச் செயல் கள் இதழியலின் ஆன்மாவுக்கு எதிரானது. ஊடகங்கள் இத்தகைய செயல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

;