india

img

உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் 30% வரை உயர்வு....

புதுதில்லி:
உள்நாட்டு விமானப் பயணத்திற்கான கட்டணங்களை உயர்த்தி மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதனால் விமானப் பயண கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரிக்கிறது. 

\கொரோனா தொற்று பரவலால் விமான போக்கு வரத்துத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான பயண நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றுவது, சம்பளத்தைக் குறைப்பது என்று நடவடிக்கை மேற்கொண்டன. இந்நிலையில் விமானப் பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. விமானப் பயணத்தின் நேரம் அடிப்படையில் ஏழு பிரிவுகளாக பிரித்த மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அவற்றிற்கு கட்டணத்தை நிர்ணயித்தது.இதனைத்தொடர்ந்து தற்போது விமானப் பயண கட்டணங்களுக்காக வரம்புகளை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 2,200 ரூபாயாகவும் அதிகபட்சமாக கட்டணம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 7,800 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 150 முதல் 180 நிமிட பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 20,400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.3 மணி முதல் 3.30 மணி நேர பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 7,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் 18,600 லிருந்து 5,600 ரூபாய் அதிகரித்து 24,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையோ இந்த கட்டண உயர்வு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;