india

img

ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மோசமாக பேசி தாக்க முயன்றார்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் எம்.பி. குற்றச்சாட்டு...

புதுதில்லி:
‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களை வேவு பார்த்த விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக்கிளப்பி வருகிறது. 

இதுதொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்; முன்னதாக வேவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ஒன்றிய பாஜக அரசு இப்பிரச்சனைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று வெறுமனே கூறி வருகிறது. வியாழக்கிழமையன்று மாநிலங்களவை யில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவும் உப்புக்குச் சப்பில்லாத பதிலையே மீண்டும் மீண்டும் கூறினார். இதனால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அப்போது, திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென், அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வைத்திருந்த பேப்பரை பிடுங்கிக் கிழித்துஎறிந்தார். இதற்காக சாந்தனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக-வினர் கூறி வந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற அமளியைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தன்னைத் தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனுபுதிய குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். “அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், ஹர்தீப் சிங் பூரி திடீரென்று என்னை மிகவும் மோசமான முறையில் அழைத்தார். நானும் அவரது அருகில் சென்றேன் ஆனால் அவர் என்னை அச்சுறுத்தத் தொடங்கினார். திடீரென என்னை தாக்குவதற்கு முயற்சிசெய்தார். உடல் ரீதியாக அவர் என்னைத் தாக்கப் போகிறார் என்பதை நான் அறிந்தேன்.  நல்லவேளையாக சக எம்.பி.க்கள் இதனைக் கவனித்துஹர்தீப் சிங் பூரியிடம் இருந்து என்னைமீட்டனர். கடவுளுக்கு நன்றி. இந்த சம்பவம் முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது” என்று சாந்தனு சென் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் ஹரிவன்சிடமும் சாந்தனு சென் புகார் அளித்துள்ளார்.

;