india

img

வேளாண் சட்டத்திற்கு எதிராக மேலும் இரண்டு பேரணிகள்... கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தகவல்...

புதுதில்லி:
வேளாண் சட்டத்திற்கு எதிராக மேலும் இரண்டு பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித் துள்ளார்.ஒன்றிய பாஜக அரசின் புதியவேளாண் சட்டங்களுக்கு எதிராக, லட்சக் கணக்கான விவசாயிகள், தலைநகர் தில்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு, கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், பாரதியகிஷான் யூனியன் தலைவர்ராகேஷ் திகாயத் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதுஎன முடிவு செய்துள்ளோம். அதற்காக கூடுதலாக 2 பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி, ஜூலை 9 மற்றும் 24 ஆகிய நாட்களில் டிராக்டர் பேரணி நடைபெறும். ஜூலை 9-ஆம் தேதியில் சாம்லி மற்றும் பாக்பத் நகர மக்களும், ஜூலை 24-ஆம் தேதி பிஜ்னோர் மற்றும் மீரட் நகர மக்களும் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

;