india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ஹைதராபாத்தில் அப்போலோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த்  ஞாயிறன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம்முழு ஓய்வில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழலை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

                                                                       *********************

ஆலந்தூரில் புதிய சார்பு நீதிமன்றத்தை  உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஞாயிறன்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். 

                                                                       *********************

கிருஷ்ணகிரி அணை அருகே அடையாளம் தெரியாத வாகனம்மோதிய விபத்தில் 2 ராணுவ வீரர்கள்உயிரிழந்தனர்.

                                                                       *********************

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில் தாழ்வுநிலைபனிச்சரிவு ஏற்படும் அபாயத்துக் கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  

                                                                       *********************

ஜனதா தளம் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக  நிதீஷ் குமார் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புதிய கட்சித் தலைவராக ஆர்சிபி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி கே.சி. தியாகி தெரிவித்துள்ளார். 

                                                                       *********************

கொரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான மருத்துவ குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறு வனம் தெரிவித்துள்ளது.

                                                                       *********************

ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்லோ வாக்கியா ஆகிய நாடுகளில்  பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

                                                                       *********************

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91 சதவீதம் பயனளிக்கிறது. நோய்எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது என்று துருக்கி நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 

;