india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

சென்னையில் நடைபெற்ற விவ சாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்வேட்பாளராக எடப்பாடி பழனி சாமியை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்வி க்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். 

                                               *************************

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,583 கனஅடியில் இருந்து 1,270 கனஅடியாக குறைந்தது.

                                               *************************

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

                                               *************************

பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                               *************************

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

                                               *************************

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்துள்ள ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ,  திங்கட்கிழமை பூந்தமல்லி காவல்  உதவி ஆணையர்  சுதர்சனத்திடம் வழங்குகிறார்.

;