india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிதாக உரிமம் வழங்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                     ************************

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக டிசம்பர்14 ஆம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

                                     ************************

குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

                                     ************************

ஆளுங்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும்என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

                                     ************************

மாமல்லபுரம் கடல் அகழாய்வு முடிவு வெளியிடப்கட்டதா? இல்லையா?  வெளியிட வில்லையெனில், எப்போது வெளியிடப்படும்? இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?  என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

                                     ************************

சமூக வலைதளச் சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி சிறிய போட்டி நிறுவனங்களை நசுக்கி வருவதாக பேஸ்புக் மீது அமெரிக்க அரசும், அதன் 48 மாகாண அரசுகளும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

                                     ************************

இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 2027-க்குள், ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள் ளது.

;