india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.அபுதாபியில் பணிபுரிந்து வரும் பஞ்சாபை சேர்ந்த 29 வயது சத்னம் சிங் தனது வேலையை துறந்து தில்லிஎல்லையில் நடைபெறும் போராட்டத் தில் பங்கேற்றுள்ளார்.

                                 ************************

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களிடம் பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி.இன்று (வியாழக்கிழமை) அளிக்கிறார்.

                                 ************************

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் ரூ.59,000 கோடி ஒதுக்க மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

                                 ************************

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்லஇசையமைப்பாளர் இளையராஜா வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

                                 ************************

பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கும்போது சட்டத்திற்கு ஏன் வழங்கவில்லை என சிந்திக்க வேண்டும் என்றும் சட்டத்துறைக்கு நோபல் பரிசு பெறுவதற்கான முன்னெடுப்பை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் கைகோர்க்கத் தயார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறினார். 

                                 ************************

டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  தெரி வித்துள்ளார். கடந்த 8 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

                                 ************************

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில்  புதன்கிழமையன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சந்தித்து, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

;