india

img

‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியதால் தமிழகம் கூடுதலாக கடன் பெற மத்திய அரசு அனுமதி...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, சீர்திருத்தங்கள் என்ற பெயரில்  பெரும் முதலாளிகள் ஆதாயம் பெறும் வகையில் ஒவ்வொரு துறையிலும்நாசகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் மக்கள் நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டும் வேலையிலும் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி, இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் -சீர்திருத்தங்களை ’தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள்கூடுதலாக ரூ.16 ஆயிரத்து 728 கோடி கடன் பெற்றுக்கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதலாகக் கடன்பெற விருப்பமுள்ள மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் எளிதாகத் தொழில் செய்வதற்காக மத்திய அரசுகொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த 5 மாநிலங்களும் மாவட்ட அளவிலானவர்த்தகச் சீரமைப்பு திட்டத்தைச் செயல்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்தே கூடுதல் கடன்பெற அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எளிதாகவர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை முழுமையாக 5 மாநில அரசுகள்தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி யுள்ளன. இந்த 5 மாநில அரசுகளும் கூடுதலாகவெளிச்சந்தையில் ரூ.16,728 கோடி கடன்பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படு கிறது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;