india

img

கொரோனாவிலும் லாபம் ஈட்டிய 10 பொதுத்துறை நிறுவனங்கள்... ஒன்றிய அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் தகவல்....

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட 2020-21 நிதியாண்டிலும் 10 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ஒன்றிய கனரக தொழிற்துறை இணையமைச்சா் கிருஷண் பால்குர்ஜார் இதுதொடர்பாக மாநிலங்களவையில் தெரிவித்திருப்பதாவது:ஒன்றிய கனரக தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் 15 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 28 நிறுவனங்கள் மூடப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுபவையாகவும், 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டாதவையாகவும் மாறியுள்ளன.கொரோனா தொற்று பரவலால் தொழிற்சாலைகளின் பணிகளில் தொடர் தடைகள், உள்நாட்டிலும் உலக அளவிலும் விநியோகப்பணிகளில் இடையூறு உள்ளிட் டவை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறனை பாதித்துள்ளன. எனினும், தணிக்கை செய்யப்படாத அறிக்கையின்படி 2020-21 நிதியாண்டில் 10 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் லாபம்ஈட்டியுள்ளன.இவ்வாறு கிருஷண் பால் குர் ஜார் தெரிவித்துள்ளார்.

;