india

img

3.5 கோடி கிராம  வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்... மத்திய அரசு தகவல்...

புதுதில்லி:
ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 3.5 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி 2019 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி வைத்தார். 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் இருந்த 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளால், தற்போது 3.53 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க உதவியுள்ளது. மேலும் 52 மாவட்டங்கள், 77 ஆயிரம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. தற்போது 6.76 கோடி கிராம வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.

100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற முதல் மாநிலமாக கோவா உள்ளது. இதற்கு அடுத்ததாக தெலுங்கானா மாநிலம் உள்ளது. தரமான குடிநீர் ஒவ்வொரு வீட்டுக்கும் போதிய அளவில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது.

;