india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் ரூ. 1.19 லட்சம்!

கொரோனா-விலிருந்து தப்பிக்க அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பயன்படுத்திய காக்டெயிலை, இந்தியாவில் தயாரிக்க ‘ரோச்செ’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் சிப்லா நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்துள்ளது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், 1200 மில்லி கிராம்எடைகொண்ட இந்த மருந்தின் விலை, ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஆகும்.ஒரு டோஸின் விலை ரூ. 59 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும்.

                                  *****************

தாய் - தந்தையை இழந்து 577 குழந்தைகள் தவிப்பு!

கடந்த ஏப்ரல் 1 முதல் இதுவரை, கொரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் 577 குழந்தைகள், தங்களின் தாய்,தந்தையை இழந்துஆதரவற்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்த குழந்தைகளை காப்பாற்றி, ஆதரவு அளிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                  *****************

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு தடுப்பூசி!

தில்லியில், 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ளும் 95 சதவிகித மாணவர் களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அவர் கள் சராசரியாக 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்குட்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களுக்கு அமெரிக்காவின் ‘பைசர்’ மற்றும் பயோடெக்-கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித் துள்ளார்.

                                  *****************

ரூ. 1,000 கோடி கேட்டு ராம்தேவுக்கு நோட்டீஸ்!

நவீன அறிவியல் மருத்துவம் தொடர்பான, தனது முரண் பட்ட கருத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், அதனைத் திரும்பப் பெறுவதாகவும் கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூறியிருந்தார். இந்நிலையில், ‘பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ்,அடுத்த 15 நாட்களில் தங்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிடில் ரூ. 1000 கோடிஇழப்பீடு தரவேண்டும்’ என்று இந்திய மருத்துவச் சங்கத்தின், உத்தரகண்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

                                  *****************

கங்கையில் மிதந்த உடல்கள்; ஆர்எஸ்எஸ் கருத்து என்ன?

‘கங்கை நதியில் ஏரா ளமான உடல்கள் மிதந்து வந்தபோது, அது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஏதாவது கருத்து தெரிவிப்பார்’ என எதிர் பார்த்ததாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும்,பகவத் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், அவர் ராமர் கோயில் விவகாரத்தில் அளித்த முக்கியத்துவத்தை, கங்கை நதிக்கும் அளிக்க வேண்டும் என்றும் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

;