india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மாநில கட்சியை ஆதரிக்க வேண்டும்!

“கர்நாடகத்தை இதுவரை ஆட்சிசெய்த காங்கிரஸ், பாஜக மாநிலத்தின் பிரச்சனை களைத் தீர்க்கவில்லை. அது மொழியாக இருந்தாலும் சரி, நிலமாக, நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி. எனவே, அண்டை மாநிலங்களைபோல் கர்நாடகத்திலும் மாநில கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை ஆதரித்தால் மட்டுமே மாநில உரிமைகளைக் காக்க முடியும்” என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

                              ****************

தேவேந்திர பட்னாவிஸ் ‘பொய் உற்பத்தி இயந்திரம்’

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ‘பொய் இயந்திரம்’ என்று காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடுமையாக சாடியுள்ளார்.  “தங்களது ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே தங்கர் சமுதாயத்துக்கு பாஜக இடஒதுக்கீடு அளிக்கும் என 2014-இல் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துவிட்டு தங்கர் சமூகத்தினரை முதுகில் குத்தினார். அதேபோல மராத்தா சமூகத்தினருக்கும் துரோகம் செய்துள்ளார். தற்போது, பாஜக-வால் கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து,மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 55 ஆயிரம் பேர் பதவி இழக்கும் அபாயத்தில் உள்ளனர்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

                              ****************

பொருளாதார தொகுப்பு அல்ல; வெறும் புரளி!

“ஒன்றிய அரசின் நிதிஅமைச்சர் அறிவித்த பொருளாதார தொகுப்பு என்பது தொகுப்பு இல்லை. பாஜக-வின் மற்றொரு புரளி ஆகும். இந்த பொருளாதார தொகுப்பை எந்த குடும்பமும் தங்களது வாழ்க்கை, உணவு, மருந்துமற்றும் குழந்தைகள் கல்வி செலவுக்குப் பயன்படுத்த முடியாது” என்று காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

                              ****************

6 மாநிலங்களிலும் ஆம் ஆத்மி போட்டி!

குஜராத்தில் பாஜக-வுக்கு மாற்றாகவும், பஞ்சாப்பில் காங்கிர சுக்குப் போட்டியாகவும் சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிட உள்ள தாக ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி அறிவித்துவிட்டது. இந்நிலையில், இந்த இரண்டுமாநிலங்கள் மட்டுமன்றி கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிடுவதென ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது.

                              ****************

அமிதாப் கந்த்-தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்-தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. 30.06.2021 தேதியுடன் அமிதாப் கந்த்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது, மேலும்ஓராண்டுக்கு 30.06.2022 வரை பதவிக்காலத்தை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

;