india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

2-ஆவது அலை இன்னும்  முடிவுக்கு வரவில்லை!

“கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. டெல்டா பிளஸ் மாறுபாட்டு அச்சுறுத்தல் உள் ளது. மேலும், தொற்றின்3-வது அலை அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் எனது அரசு எந்தசமரசமும் செய்யாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                 ****************

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது!

“பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர் களை சந்திப்பதற்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றகுற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” என காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புகூட கெஜ்ரிவாலின் பேரணிக்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள அம்ரீந்தர் சிங், “கெஜ்ரிவால் விரும்பினால் அவருக்கு மதிய உணவு ஏற்பாடுசெய்வது கூட தங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்

                                 ****************

பஞ்சாப்பில் ‘300 யூனிட்’  மின்சாரம் இலவசம்!

“பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப் படும்; இதனால், பஞ் சாபில் 77 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரையிலான மக்கள்மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லாத நிலை ஏற்படும்” என்றுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். மேலும், “முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்கள் ரத்து செய்யப்படும்” என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

                                 ****************

சரத்பவாருடன்  சஞ்சய் ராவத் சந்திப்பு!

“மகாராஷ்டிரா வில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவுசெய்யும்” என்று மூத் தத் தலைவர் சரத் பவார் கூறியிருந்த நிலையில், அவரை, சிவசேனா மூத்த தலைவா் சஞ்சய் ராவத், நேரில் சந்தித்து பேசினார். முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரே உடனான 2 மணிநேரம் சந்திப்புக்கு பிறகே,சரத் பவாரையும் ராவத் சந்தித்தார்.

                                 ****************

காங்கிரஸ் தலைவர்கள் மோதிக் கொள்வது ஏன்?

“கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டு கள் உள்ளன. அப்படி இருந்தும் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுஇருப்பது ஏன்? என்று தெரியவில்லை. முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது” என்று ஒன்றியஅமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

;