india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மே.வங்க தேர்தலுக்கு பிறகே மோடி ஊரடங்கு அறிவிப்பார்

“கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது என்பதை தேசிய அளவில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மும்முரமாக உள்ளார். அவருக்கு மேற்குவங்க தேர்தல்தான் பிரதான பிரச்சனை. அந்தமாநிலத்தில் தேர்தலை முடித்த பிறகுதான் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பார்” என்று மகாராஷ்டிர காங்கிரஸ்தலைவர் நானா படோலே விமர்சித்துள்ளார்.

                              ***************

காங்கிரஸ் கட்சி சார்பில் யூடியூப் சேனல் துவக்கம்

காங்கிரஸ் கட்சி ‘ஐஎன்சி டிவி’ (INCTV) என்ற யூடியூப் சேனலைத் துவங்கியுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே, காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் நீரஜ்குந்தன் ஆகியோர் இந்த சேனலைதுவங்கி வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் குரல்களை, வெகுஜன ஊடகங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்காத நிலையில், இந்த சேனலின் மூலம்,தங்களின் செய்திகளை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க முடியும்  என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

                              ***************

தலித் தலைவருக்கு துணை முதல்வர் பதவி!

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் வெற்றிபெற்றால் தலித் ஒருவருக்கே துணை முதல் வர் பதவி வழங்கப் படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் எனவும் இப்போதே அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.பஞ்சாப் மக்கள் தொகையில் 33 சதவிகிதம் பேர் தலித்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                              ***************

அனில் தேஷ்முக்கிடம்  8 மணி நேரம் விசாரணை

ரூ. 100 கோடிமாமூல் வசூலித்துத் தரச் சொன்னதாக, மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். குற்றச்சாட்டுப் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப அவசர அவசரமாக மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந் நிலையில், புதனன்று சுமார் 8 மணிநேரம் சிபிஐ விசாரணையை அனில் தேஷ்முக் எதிர்கொண்டார்.

                              ***************

320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து திருட்டு!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ்கோவாக்சின் தடுப்புமருந்து திருடு போயுள் ளது. சாஸ்திரி நகரில் உள்ள கன்வட்டியா அரசு மருத்துவமனையிலிருந்தே இந்ததடுப்பூசிகள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

;