india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

உணவகங்களில் பார்சல்களுக்குப் பயன்படுத்தப்படும் உறைகளை எடுக்கும் போது எச்சில் தொட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பாலித்தீன் உறைகளை திறக்கும் போது வாயால் ஊதுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

                                          *****************

குடிசை மாற்று வாரியத்தில் பயனாளிகள் அல்லாது வீடுகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு சிதிலமடைந்த வீடுகளை இடித்துஅப்புறப்படுத்திவிட்டு, அங்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

                                          *****************

சுற்றுச்சூலை மாசுபடுத்தாத வகையில் பேட்டரியால் இயங்கும் 100 பசுமைப் பேருந்துகள் திருப்பதி- திருமலை இடையே விரைவில் இயக்கப்படும் என்று அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

                                          *****************

தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

                                          *****************

மாநிலங்களின் கையிருப்பில் 2.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக ஒன்றிய அரசு சனிக்கிழமையன்று தெரிவித்தது.

                                          *****************

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலியான நெகடிவ் சான்றிதழ் வழங்கிய ஆய்வுக் கூடங்கள் குறித்து ஹரித்வார் மாவட்ட நிர்வாகம்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

;