india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ரெயில்வே துறையில் விரைவில் 90 சதவீத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

                                    *************

அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சார்பில் நீரிழிவு நோய்க்கு வாய்வழியே உட்கொள்ளும் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது.  

                                    *************

செவ்வாய் கிரகத்தில் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாக நம்பும் நிலையில், அண்மையில் பெர்சிவரன்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

                                    *************

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

                                    *************

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தில்லியில் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

                                    *************

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களது பயிற்சி உள்ளிட்ட செலவுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி அளித்து வருகிறது.

                                    *************

மகாராஷ்டிராவில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பரீட்சை இன்றி தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

                                    *************

ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 238 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

                                    *************

குருத்தானமேடு பகுதியில் விவசாய நிலத்திற்கான பம்ப் செட் மோட்டார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 800 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

                                    *************

கும்பகோணத்தில் வாக்காளர் களுக்கு டோக்கன் கொடுத்த சம்பவம் தொடர்பாக அமமுக பிரமுகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

                                    *************

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.61 அடியாக குறைந்தது.

                                    *************

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல்17ஆம் தேதி வரை இரவு நேரப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

                                    *************

கொரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தோடு குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். 

                                    *************

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கு எந்தவிதமான பிரத்யேக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

                                    *************

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்.

                                    *************

ஹரியானாவில் பணிமனை யில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

                                    *************

நெல்லையில் ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.

                                    *************

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளியன்று (ஏப்.9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

                                    *************

ஜார்கண்ட் மாநிலத்தில் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்தார். 

;