india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                        ****************

கியூபா நாட்டு வங்கிகளில் அமெரிக்க டாலரை கொண்டு பரிவர்த்தனைகள் செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

                                        ****************

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

                                        ****************

அண்டார்டிக்காவில் உள்ள மிகப்பெரிய பனித் தீவு வேகமாக உருகி வருவதால் அடுத்த 20 ஆண்டுகளில் அது காணாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

                                        ****************

6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

                                        ****************

ஹெச்-1பி விசா விண்ணப்ப பரிசீலனையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆட்சிக் காலத்து கொள்கையை திரும்பப் பெற அமெரிக்க குடியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.

                                        ****************

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தனி புகார் பிரிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

 

;