india

img

கும்பமேளாவின் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி.... ஹரித்துவாரில் ஒரே ஆசிரமத்தில் 30 பேருக்கு கொரோனா....

ஹரித்துவார்:
ஹரித்துவாரில் சாமியார்களின் ஆசிரமம் ஒன்றில் 32 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்துவார், இந்துக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றாகும். கங்கை நதி முதல் முதலாகச் சமவெளிப் பகுதியில் பாய்வது இங்குதான். வழக்கமாகவே ஹரித்துவாருக்கு ஏராளமானோர்வந்து செல்வார்கள். இந்நிலையில் ஏப்ரல் 30 வரை ஒருமாதம் நடைபெறும் கும்பமேளாவும் தொடங்கியிருப்பதால், லட்சக்கணக்கானோர் ஹரித்துவாருக்கு வர ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவில் புதியவகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், கும்பமேளாவையொட்டி, ஹரித்துவாரில் ஒரே இடத்தில் பல லட்சம் பேர்கூடப்போவது கொரோனா அபாயத்தை அதிகரித்துள்ளது. உத்தரகண்ட் பாஜக அரசோ, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறியுள்ளது.

ஹரித்துவாருக்குள் வரும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதையும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பதையும் கட்டாயம் ஆக்கியுள்ளது. நகரின் ஒவ்வொரு வாயிலிலும் தீவிர பரிசோதனை நடத்தி வருவதாகவும்கூறியுள்ளது. ஆனால், இதற் கெல்லாம் பலன் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில், இங்குள்ள ஆசிரமம் ஒன்றில் மட்டும் 32 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள்தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இது உத்தரகண்ட் மக்களை மட்டுமன்றி, கும்பமேளாவுக்குச் செல்லும் பல்வேறு மாநில மக்களையும் அச்சமடைய வைத்துள்ளது.

;