india

img

கும்பமேளாவைத் தொடர்ந்து சார்தாம் யாத்திரைக்கும் அனுமதி? உ.பி. பாஜக அரசின் தொடர் அலட்சியம்....

லக்னோ:
கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகி இருக்கும் நிலையில், மக்கள் கூட்டமாகக் கூடும் அனைத்து விதமான மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. 

மருத்துவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி கும்பமேளாவுக்கு அனுமதி வழங்கியதே, நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுப்பதற்கு முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டுஎழுந்த நிலையில், இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங் களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், கும்பமேளாவில் பெருக்கெடுத்த கொரோனா தொற்றிலிருந்தே இன்னும்மீள முடியாத நிலையில், உத்தரப்பிரதேச பாஜக அரசானது, ‘சார்தாம் யாத்திரை’க்கும் அனுமதி வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புகழ் பெற்ற இமயமலை ஆலயங்களுக்கான பக்தர்களின் புனிதப் பயணம் ‘சார்தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகிறது. இந்த யாத் திரை, வரும் மே 14 அன்று துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச பாஜக அரசு இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அகில இந்திய அளவில் கொரோனா தொற்றுப் பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கான கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால், இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் உ.பி. பாஜகஅரசு சார்தாம் யாத்திரைக்கு ஏற்பாடுகளைச்செய்து வருவதாகவும், இதனைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

;