india

img

ஷாகின் பாக் போராட்டம்.... எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எல்லா இடங்களிலும் இருக்க முடியாது.... உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு....

புதுதில்லி:
எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது.  ஷாகின் பாக் போராட்டத் திற்கு எதிரான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.  

மக்களை பிளவுபடுத்தும் வகையில்மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.இதில் தில்லியின் ஷாகின் பாக் பகுதியில்  2019 டிசம்பர் 14முதல் 2020 மார்ச் 24 வரை தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் ஷாகினி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர்2020 அக்டோபர் 7 அன்று தீர்ப்பளித்த னர்.அந்த தீர்ப்பில், “தில்லி ஷாகின் பாக்போன்ற பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்கமுடியாது. ஷாகின் பாக் மட்டுமல்ல எந்தப் பொது இடத்தையும் காலவரையின்றி போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்துவதை நாங்கள் ஏற்க முடியாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம்” என்று தெரிவித்தனர்.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சமூக செயற்பாட்டாளர்கள் 12 பேர் உச்சநீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதானவிசாரணை நீதிபதிகள் எஸ்.கே.கவுல்,அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரேஆகியோர் முன்பு நடைபெற்று, கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பின் நகல்  வெள்ளியன்று இரவுதான் வெளியானது.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,  முந்தைய நீதித்துறை அறிவிப்புகளை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், அரசியலமைப்புத் திட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு, ஆனால் சிலகடமைகளைக் கொண்டிருக்க வேண்டிய கடமையுடன் உள்ளது என்ற எங்கள் கருத்தை பதிவு செய்துள்ளோம். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. சில தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்கள் இருக்கலாம், ஆனால் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு அல்லது எதிர்ப்பு ஏற்பட்டால், ஒருபொது இடத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்க முடியாது. நாங்கள் ஏற்கெனவே கூறியதைத்தான் மீண்டும் கூறுகிறோம். பொது இடங்களை மறித்து போராட்டம் நடத்த முடியாது. போராட்டங்கள் தனிப்பட்ட இடத்தில் நடக்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் மீண்டும் எந்த திருத்தம் செய்யவோ, மறு ஆய்வுசெய்யவோ தேவையில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

;