india

img

ரயில் நிலைய தகவல் சேவை மையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு....

புதுதில்லி:
வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் 14 ரயில் நிலையங்களில் தகவல் சேவைமையப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. 

ரயில்வே துறையை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  முதல் கட்டமாக 14 ரயில்நிலையங்களின் தகவல் சேவைமையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. மேலும் மற்ற ரயில் நிலையங்களிலும் தனியார் சேவையை விரிவடையச் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 14 தகவல் சேவை மையங்களில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தனி சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையினர் சீருடையை அவர்கள் அணிய முடியாது.  இந்த தகவல் சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். இவற்றில் 8 மணி நேரத்துக்கு ஒருவர் என மூன்று ஷிப்டுகளில் அலுவலர்கள் இருப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, பலியா, மாவ், ஆசம்கர், பிரயாக்ராஜ், காஜிபூர், தியோரியா ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் தகவல் சேவை தொடங்கியுள்ளது.பீகாரில் சிவான் மற்றும் சாப்ராவிலும் மேற்கு வங்கத்தில் சீலாம்பூர், ஒதிதார் ஜங்ஷன் ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த சேவை தொடங்கியுள்ளது. 

;