india

img

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்...

புதுதில்லி:
தேசிய அளவிலான தடுப்பூசி திருவிழாவில் 4 முக்கிய விஷயங்களை கடைபிடிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது.  இதன்படி ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய 
அரசு அனுமதி வழங்கியது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய அளவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஏப்ரல் 11 அன்று  தொடங்கியது. இதுகுறித்துபிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில், நாம் இன்று தேசிய அளவில் டிகா உத்சவ்வை (தடுப்பூசி திருவிழா) தொடங்க இருக்கிறோம். அதனால், நாட்டு மக்கள் 4 முக்கியவிசயங்களை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.  தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள். கொரோனா சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்யுங்கள். முகக் கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்gடுத்துங்கள்.  யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

;