india

img

ஐஎம்ஏ தலைவர் இந்தியாவையே மதம் மாற்றுவதாக ‘பதஞ்சலி’ திடீர் புகார்... ராம்தேவ் மீதான குற்றச்சாட்டை திசைத் திருப்ப முயற்சி....

ஹரித்துவார்:
இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக பதஞ் சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்யா பாலகிருஷ்ணா திடீர்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நவீன மருத்துவ அறிவியல்முறை (அலோபதி) மருத்துவர் களால்தான் கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன என்று ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும், யோகா சாமியாருமான ராம்தேவ் அண்மையில் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.கடந்த மே முதல் வாரத்தில்சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ராம்தேவ், ‘கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அலோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்; அவர்கள் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மற்றும் ஆன்டி-பயோடிக் ஊசிமருந்துகளாலேயே நோயாளிகள் மரணம் அடைகின்றனர்’ என்று கூறியிருந்தார்.இதற்கு எதிராக தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் ராம்தேவ் மீது இந்திய மருத்துவ சங்கத்தினர் (IMA), காவல்துறையில் புகார் அளித்ததுடன்,ராம்தேவை தேசப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண் டும் என்று வலியுறுத்தினர். வேறுவழியில்லாமல் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் இவ்விவகாரத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து, தனது முரண்பட்டகருத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அதனைத் திரும்பப் பெறுவதாகவும் ராம்தேவ் அறிவித்தார்.

ஆனால் இந்திய மருத்துவசங்கம் அதை நம்பத் தயாரில்லை. ராம்தேவ் எழுத்துர் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லாவிட்டால் ரூ. 1000 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று 6 பக்க நோட்டீஸை அனுப்பியது.இந்நிலையில்தான், பதஞ் சலி நிறுவனத்தின் சிஇஓ-வும்,சாமியார் ராம்தேவின் உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா டுவிட்டர் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவையே கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் தீவிரமாகஇருக்கிறார் என்று திடீர் குற் றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதமாக மாறியிருக்கிறது. சாமியார் ராம்தேவ்மீதான குற்றச்சாட்டை திசைத் திருப்பவே , ஆச்சார்யா பாலகிருஷ்ணா மதப் பிரச்சனையைக் கிளப்புகிறார் என்று பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

;