india

img

தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால்  25 பேர் பலி....

புதுதில்லி:
தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் உடனடியாக ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் கூறுகையில் ‘‘கங்கா ராம் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 140-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால், மிகவும் தீவிரமான நிலையில் இருந்த நோயாளிகள் 25பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள். வெண்டிலேட்டர், பிபாப் போன்ற கருவிகள் முறையாகச் செயல்படவில்லை. விமானத்தில் மூலமாவது உடனடியாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

;