india

img

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... பாஜக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்...

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய பாஜக அரசு பிடிவாதமான முறையில் மறுத்துவருவதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சியும்அக்கூட்டணியிலிருந்து விலகியது.
ராஜஸ்தானில் இக்கட்சிக்கு மக்களவையில் ஓர் உறுப்பினரும், மாநில சட்டமன்றத்தில்மூன்று உறுப்பினர்களும் உள்ளனர்.

ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவரும், நாகர் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஹனுமான் பெனிவால், ராஜஸ்தான்-ஹரியானா எல்லையருகில் உள்ள ஷாஜஹான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டபோது இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அங்கே அவர் உரையாற்றுகையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றுதாங்கள் பாஜகவிடம் கேட்டுக்கொண்டபோது அதற்கு அக்கட்சி செவிமடுக்கத் தயாராகயில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தைத் தவறான முறையில் எதிர்கொள்கிறது என்று குற்றஞ்சாட்டினார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் வெளியேறியதை அடுத்து, இரண்டாவதாக, ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி வெளியேறியுள்ளது.இதனைத்தொடர்ந்து ஹனுமான் பெனிவால், தான் அங்கம் வகித்துவந்த மூன்று நாடாளுமன்றக் குழுக்களிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார்.“விவசாயிகளின் சுயமரியாதையே, எங்கள் கட்சியின் வலுவாகும். விவசாயிகளின் சுயமரியாதைக்குப் பங்கம் வந்தபின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்டது போல் எங்களால் இருக்க முடியாது” என்று ஹனுமான் பெனிவால் விவசாயிகளிடையே தெரிவித்தார்.பின்னர் விவசாயிகள் நடத்தி வந்த கிளர்ச்சிப்போராட்டங்களில் தன்னையும் தன் கட்சி உறுப்பினர்களையும் முழுமையாக அவர் இணைத்துக்கொண்டார். (ந.நி.)

படத்திற்கு கீழே..  போராடும் விவசாயிகள் மத்தியில் ஹனுமான் பெனிவால் உரையாற்றுகிறார்.

;