india

img

எதுவுமே என் கையில் இல்லை... மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.... பிரதமரின் பொறுப்பற்ற பேச்சு குறித்து எதிர்க்கட்சியினர் சாடல்...

புதுதில்லி:
எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்குஎதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகிறார்கள். தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதை விரைவில் தீர்க்கக் கோரி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.பிரதமர் மோடி செவ்வாயன்று உரையாற்றிபேசுகையில், “ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை தீர்க்கப்படும். லாக்டவுனை கடைசிக்கட்ட நடவடிக்கையாக மாநில அரசுகள் எடுக்கவேண்டும். எதுவுமே என் கையில் இல்லை. மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், “நாட்டில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளைஅதிகப்படுத்த என்ன செய்வது, ஆக்சிஜன்சப்ளையை அதிகரிப்பது, ரெம்டெசிவிர், டோசிலிஜும்பாக் மருந்துகள் சப்ளையைஅதிகப்படுத்துவது,

தடுப்பூசி பற்றாக்குறை யைப் போக்குவது குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்த்தோம்.ஆனால், பிரதமர் மோடியோ அனைத்துப்பொறுப்புகளையும், தேசத்தைக் காப்பாற்று வதையும் என்ஜிஓ மீதும், இளைஞர்கள் மீதும் சுமத்திவிட்டு அவர் நழுவி விட்டார். அதுமட்டுமல்லாமல் எந்தச் சூழல் ஏற்பட்டாலும் பொது முடக்கத்தை மட்டும் கொண்டுவராதீர்கள் என மாநிலங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். அவரது பேச்சில் ஒன்றுமில்லை, பேச்சு மட்டும்தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் கூறுகையில், “பிரதமர் மோடி பேசியபேச்சின் சாராம்சம் என்னவென்றால் எதுவுமேஎன் கையில் இல்லை. மக்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மணிஷ் திவாரி டுவிட்டரில் கூறுகையில், “பிரதமர் மோடியின் அடிப்படை விஷயம், இளைஞர்களே உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதுவரை பாதுகாப்பாக இருந்தால், நாம் மீண்டும் சில விழாக்களில் அல்லது மகா உத்சவத்தில் சந்திப்போம். கடவுள் துணையிருப்பாராக” எனத் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் டுவிட்டரில் கூறுகையில், “பிரதமர் மோடியின் சுருக்கம் என்பது, நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். போட்டோவுக்கு நான், பிரச்சனைகளைச் சந்திப்பது நீங்கள். ஒரு சிறிய கேள்விக்கு பதில் கூறுங்கள். கொரோனா 2-வது அலைக்கு ஏன் மத்திய அரசு தயாராகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

;