india

img

தில்லியில் இரவு ஊரடங்கு அமல்....

புதுதில்லி:
தில்லியில் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை நாள்தோறும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.கோவிட்-19 கொரொனா வைரஸ் தொற்றுப் பரவல்திடீரென அதிகரித்திருப்ப தைத் தொடர்ந்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கிறது. இது வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.நாட்டில் ஒரேநாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்ப தாக அறிக்கைகள் வெளி யாகி இருப்பதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இ-பாஸ், விதிவிலக்கு
ஆயினும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக செல்பவர்களுக்கும், அத்தியாவசியப் பணிகள் சார்பாக செல்பவர்களுக்கும் இ-பாஸ் (e-pass) களுடன்  அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள், இதழாளர்கள் தங்கள் அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள். சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் விதி விலக்கு அளிக்கப்படும்.  விமானங்கள் மூலம் இரவு நேரங்களில் வருபவர்கள் தங்கள் டிக்கெட்டு களைக் காண்பிப்பதன் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

இதேபோன்று மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களும் இரவு ஊரடங்கு அறிவித்திருக்கின்றன. மகாராஷ்டிரா, வார இறுதிநாட்களில் சமூக முடக்கத்தையும், இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரையிலும்ஊரடங்கையும் அறிவித்திரு க்கிறது. ராஜஸ்தானில் இரவு ஊரடங்கு நேரம் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலாகும்.(ந.நி.)

;