india

img

பாஜக தலைவர் சம்பித் பத்ரா பரப்பிய செய்தி மோசடியானது.... முத்திரை குத்தியது டுவிட்டர் நிறுவனம்....

புதுதில்லி:
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம், சட்டப்பேரவைத் தேர்தல், கும்பமேளா, கொரோனா எனவிஷயங்களிலும் சமூகவலை தளங்களில் பாஜக-வினர் பொய்யை பரப்புவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அது அவ்வப்போது அம்பலமாவதும் வாடிக்கையாகிவிட்டது. எனினும் பாஜக-வினர் தங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்நிலையில், கொரோனா விஷயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி டூல்கிட்ஒன்றை உருவாக்கி இருப்பதாககூறி, பாஜக செய்தித் தொடர்பா ளர் சம்பித் பத்ரா உட்பட பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர். 

ஆனால், அந்த டூல்கிட் போலியானது என்று கூறிய காங்கிரஸ் கட்சி, இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்தது. மேலும் பாஜக தலைவர்களின் பதிவுகள் மீது டுவிட்டர் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.இதையடுத்து, பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா-வின் சர்ச்சைக்குரிய பதிவை, திரித்துக்கூறப்பட்ட செய்தி என்று டுவிட்டர் நிறுவனம் முத்திரை குத்தியுள்ளது.

;