india

img

அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனர் நியமனம்!

அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் செயல்படுவார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

அமலாக்கத்துறை இயக்குநராக 1984ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான சஞ்சய் குமார் மிஸ்ரா 2018-ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வந்த இவர் பதவிக் காலத்தை நீட்டித்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து இவரது பதவிக் காலம் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்., கேடரான ராகுல் நவீன், அமலாக்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து வந்துள்ளார்.  அதிகாரப்பூர்வமாக புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரையில், இவர் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.