india

img

மோடி அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது... எந்த விஷயத்திலும் மக்களின் கருத்தை கேட்பதில்லை.... துவாரகா, பூரி சங்கராச்சாரியர்கள் பகிரங்க விமர்சனம்....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு நடத்தும் போராட்டம் 75 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தற்போது ஆதரவு அதிகரித்து வருகிறது.சிரோமணி அகாலிதளம், ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சிகள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விவசாயிகளை ஆதரித்தன. பஞ்சாப்பில் பாஜக தலைவர்களே பலர் அக்கட்சியிலிருந்து விலகி, விவசாயிகளை ஆதரிக்க துவங்கியுள்ள
னர்.

குறிப்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் துவங்கி அண்மையில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் மருகள் மீனா ஹாரிஸ், ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்தது, மோடி அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், அரசியல் விவகாரங்களில் பெரும்பாலும் கருத்து சொல்வதைத் தவிர்க்கும் துவாரகா மற்றும் பூரி சங்கராச்சாரியர்களும் தற்போது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளனர்.உத்தரப்பிரதேசம் அலகாபாத்தின் கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சங்கராச்சாரியார்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.குஜராத் மாநிலம் துவாரகையிலுள்ள சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சொரூபாணந்த் சரஸ்வதி அளித்துள்ள பேட்டியில், ‘‘2016-இல் அமலாக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் துவங்கி வேளாண் சட்டங்கள் வரையிலான  பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு தன்னிச்சையாகவே முடிவு எடுத்துள்ளது; இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பழக்கமாகவே ஆகி விட்டது” என்று கடுமையாக சாடியுள்ளார்.“இந்த ஒருதலைப்பட்சம் என்பது, ஜனநாயகத்திற்கு விரோதமானது’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று ஒடிசா மாநிலம் பூரி-யிலுள்ள கோவர்த்தன் பீடத்தின் சங்கராச்சாரியார் நிஷ்சாலானந்த் சரஸ்வதியும் விமர்சனம் வைத்துள்ளார்.“நமது நாட்டின் விவசாயிகள் இவ்வளவு நாட்களாகப் போராடுவது சரியல்ல. பொதுமக்களில் முக்கியமானவர்களாக இருக்கும் விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்டு, அதனை வேளாண் சட்டங்களில் சேர்த்திருக்க வேண்டும்”என்று நிஷ்சாலானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். “இனியாவது விவசாயிகளிடம் பேசி அவர்கள் கருத்துக்களும் சேர்க்கப்படும் என நம்புகிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

;