india

img

18 மாத அகவிலைப்படி நிலுவை ரூ. 34 ஆயிரம் கோடி ஸ்வாஹா? அரசு ஊழியர்கள் ஒரு கோடிப் பேரை ஏமாற்றிய மோடி அரசு...

புதுதில்லி:
கொரோனா தொற்று தடுப்புக்கான செலவினங்களைக் காரணம் காட்டி, ஒன்றிய  பாஜக அரசானது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் கை வைத்தது. ஒன்றிய அமைச்சர்கள்,எம்.பி.க்களின் ஊதியத்திலும் 30 சதவிகி தத்தைக் குறைத்தது.

மறுபுறத்தில் ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாற்றும் சுமார் 48 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, இடைக்கால நிவாரணமும் (dearness allowance and dearness relief) 01.01.2020 முதல் 30.06.2021 வரை முடக்கப்பட்டது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, இடைக்கால நிவாரண பாக்கி பின்னாளில் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் ஊழியர்களும் 18 மாதமாக காத்திருந்தனர்.ஆனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அந்த நம்பிக்கையை மோடி அரசு தற்போது தகர்ந்துள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான 18 மாத காலத்திற்கு உரிய, அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்து வதற்கான யோசனை அரசாங்கத்திடம் இல்லை நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.2021 ஜூலை 1 ஆம் தேதி முதலான அகவிலைப்படி மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஒன்றிய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2021 ஜூலை முதல் 28 சதவிகிதம் (17%+11%) அகவிலைப்படி உதவித்தொகை மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது- இது ஆகஸ்டில் 3 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று செலவினத்தைக் காரணம் காட்டி, அகவிலைப்படி - அன்பளிப்பு நிவாரணங்களை நிறுத்தி யதன் மூலம் கடந்த 18 மாதங்களில், மோடி அரசு 34 ஆயிரத்து 402 கோடியே 32 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது.

;