india

img

மீண்டும் வெற்றி பெறுவோம்... பினராயி விஜயன் நம்பிக்கை......

திருவனந்தபுரம்:
கடந்த முறை கிடைத்ததைவிட கூடுதல் இடங்களுடன் இம்முறை இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இடது ஜனநாயக முன்னணியே மீண்டும் தொடரும் என வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதை தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒருசில நாட்கள்தானே உள்ளன, அதன்பிறகு எது சரி எது தவறு என்பதை முடிவு செய்யலாம். அனைத்தையும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

கருத்துக் கணிப்புகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வியாழனன்று பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அவை அனைத்தும் கேரளத்தில் ஆட்சித் தொடர்ச்சியாக இஜமு அரசு அமையும் என தெரிவித்துள்ளன. ரிபப்ளிக் டிவி – சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, எல்டிஎப் 72 முதல் 82 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுடிஎப் 58 முதல் 64 இடங்களைப் பெறும். தேஜகூட்டணி  1 முதல் 5 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.இந்தியா டுடே-சி வோட்டர் கணக்கெடுப்பின்படி, இடது  ஜனநாயக முன்னணி 104 முதல் 120 இடங்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். ஐஜமுன்னணி 20 முதல் 36 இடங்களை மட்டுமே பெறும் என்றும் பாஜகவுக்கு 0-2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிடிவி கணிப்பில் எல்டிஎப் 88 இடங்களையும், ஐஜமுன்னணி 51 இடங்களையும், தேஜகூட்டணி 2 இடங்களையும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.ஏபிபி-சி வோட்டர் இஜமுன்னணிக்கு 71 முதல் 77 இடங்களையும், ஐஜமு-க்கு 62 முதல் 68 இடங்களையும், தேஜகூ -க்கு 2 இடங்களையும் கணித்துள்ளது. சிஎன்என்-நியூஸ் -18 கணிப்பில் இஜமு-க்கு 72 முதல் 80 இடங்கள். ஐஜமு 58 முதல் 64 இடங்கள். தேஜகூ 1 முதல் 5 இடங்கள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

;