india

img

பொது இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கான சட்டம்....   நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்...

புதுதில்லி:
பொது இன்சூரன்ஸ் தேசியமய  திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 2) விவாதத்திற்கு வருகிறது.  பெகாசஸ் வேவு மென் பொருள், விவசாயிகள் போராட்டம் ஆகிய பிரச்சனைகளில் அரசின் பிடிவாதம் காரணமாக நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அமளிக்கு மத்தியில்விவாதமின்றி சில முக்கிய பொருளாதார முடிவுகளைத்திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரமாக இருக்கிறது. 19 நாட்கள் அமர்வில் 31 மசோதாக்கள் எனில் எப்படி ஆழமாகவிவாதிக்க முடியும்? இது ஜனநாயகமா? என்ற கேள்விகளை திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுஉட்பட எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால் ஒன்றிய பாஜகஅரசோ விவாதத்தை தான் விரும்பாததால்தான் இப்படிஅவசர கதியாக அமளியைப் பயன்படுத்தி மசோதாக்களை தள்ளுகிறோம் என்று சொல்லாமல் சொல்கிறது. 

நாடாளுமன்றம் துவங்கும் போது அறிவிக்கப்படாத மசோதாக்களைக் கூட தற்போது ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கிறது. அப்படி வருவதுதான் பொது இன்சூரன்ஸ் தேசியமய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிற மசோதா. 2015 இல் ஒரு திருத்தம் செய்யப்பட்ட போது 51 சதவீத  பங்குகள் அரசின் கைவசம் இருக்கும் என்ற வார்த்தைகள்தான்இடம் பெற்றன. ஆனால் இன்று அவை வெறும் வார்த்தைகள்தான். 51 சதவீதத்திற்கும் கீழே அரசின் பங்குகள்கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மசோதா நிறைவேறிய‌ பிறகு நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று தனியார்மயமாகும் என்பதே அரசின்திட்டம். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி தான்முதல் இலக்கு என அரசியல் வட்டங்களில் கிடைக்கும் செய்தி.

;