india

img

 ஜான்ஸன் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி...

புதுதில்லி:
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகாலத்துக்கு இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

தற்போது பல்வேறு நாடுகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியே செலுத்தப்படுகிறது. ஆனால் ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு  அனுமதி வழங்கக் கோரி அந்நிறுவனம் சார்பில் ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அவசரப் பயன்பாட்டுக்கு ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் தடுப்பூசியைப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தனது டிவிட்டரில், “இந்தியா தனது கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையைவிரிவுபடுத்தியுள்ளது. சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ள ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரானப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

;