india

img

பாஜக ஆளும் இமாச்சலில் ரூ. 12 கோடி நிதி மோசடி... விவசாயிகள் பெயரில் பயனடைந்த பணக்காரர்கள்.....

சிம்லா:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Sammann Nidhi) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

ஆனால், இந்த திட்டம் பெயரளவிலான ஒன்று எனவும், இதில் பெரியளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், உண்மையான விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடையவில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தன.இந்நிலையில்தான், பாஜகஆட்சி நடக்கும் இமாசலப்பிர தேசத்திலேயே, சுமார் 11 கோடியே 95 லட்சம் ரூபாய் அளவிற்கு, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதாவது, இமாசலப்பிரதேச மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்களில் மட்டும் 11 ஆயிரத்து  388 பேர், விவசாயிகள் என்ற பெயரில் தலா ரூ. 6 ஆயிரம் நிதியுதவி பெற்றிருப் பது அம்பலமாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, இவ்வாறு மோசடியாக நிதியுதவி பெற்றவர்கள் அனைவரும் வருமான வரிசெலுத்துபவர்கள் என்றும் கண்டறி யப்பட்டுள்ளனர். இவ்வாறு மோசடி செய்தவர் களிடமிருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் துவங்கியிருப்ப தாகவும், ஆனால், இதுவரை ரூ. 17 லட்சத்து 82 ஆயிரம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

;