india

img

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு 12% வரை வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் இன்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், தமிழகத்தின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டுள்ளார்.

;