india

img

வீட்டிற்கே சென்று ரேசன் பொருளை விநியோகிக்க ஒப்புதல் தாருங்கள்... பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்...

புதுதில்லி:
ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

‘தேசிய நலன் கருதி, இதுவரை ஒன்றிய அரசு எடுத்த முடிவுகளுக்கு ஆம் ஆத்மிஅரசு முழு ஆதரவு அளித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தேசிய நலன் கருதி ஒன்றிய அரசும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ரேசன் பொருட்கள் டெலிவரிதிட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் தில்லி மட்டுமல்ல அனைத்துமாநிலங்களிலும் அமல்படுத்தவேண்டிய திட்டம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்று கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் 72 லட்சம் ஏழை- எளிய குடும்பங்கள் பயன் பெறும் வகையிலான இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று மத்திய அரசுமறுப்பு தெரிவித்து விட்டபோதும், கெஜ்ரிவால் விடாப்பிடியாக மீண்டும் முறையிட் டுள்ளார்.பீட்சா, பர்கர் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும்போது, ரேசன் பொருட்களை ஏன் விநியோகம் செய்யக்கூடாது? என்றும் கெஜ்ரிவால் முன்பு கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;