india

img

ஹஜ் பயணத்திற்கு ஜன.10 வரை விண்ணப்பிக்கலாம்..... மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுதில்லி:
ஹஜ் 2021- பயணத்திற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

மும்பை ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்திற்கு பின்னர்  அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹஜ்பயணத்திற்கு டிசம்பர் 10 ஆம் தேதி தான் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியாக இருந்தது. ஆனால்தற்போது இது 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021-க்காக பெறப்பட்டுள்ளன. இப்பிரிவில், 2020-ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021-க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள்பெற்றுக் கொள்ளப்படுகின்றன. புறப்படும் இடங்களைச் சார்ந்து ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும்   மதிப்பிடப்பட்டுள்ள செலவும் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

;