india

img

மக்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு  எடுத்த நடவடிக்கை என்ன? பி.ஆர். நடராஜன்  கேள்வி

புதுதில்லி:
நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், வனங்களில் வசிக்கும் தலித்துகள்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பாரம்பரிய ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், கலை வடிவங்கள் மூலமாகவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னஎன்று கேள்வி எழுப்பி யிருந்தார்.இதற்கு எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்த மத்திய கலைச்சார மற்றும் சுற்றுலா இணை அமைச்சர், பிரகலாத் சிங் பட்டேல், தலித்துகள்/பழங்குடியினர் மேம்பாட்டிற்காக கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் அதன்கீழ் இயங்கிடும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம், கலாசேத்திரா ஃபவுண்டேஷன், லலித் கலா அகாடமி மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் எனினும் இதற்காக குறிப்பிட்டு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். (ந.நி.)

;