india

img

தொலைதூர ட்ரோன் பரிசோதனைக்கு  அனுமதி....

புதுதில்லி:
வெகு உயரத்தில் பறக்கும் ட்ரோன்களின் பரிசோதனைகளுக்கு, 20 நிறுவனங்களுக்கு, ஆளில்லா விமான (யுஏஎஸ்) விதிமுறைகளில் இருந்து நிபந்தனையுடன் கூடிய அனுமதியை, விமான போக்கு வரத்துத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த தொலைதூர பரிசோதனைகள், எதிர்காலத் தில் ட்ரோன்களின் டெலிவரிகள் மற்றும் ட்ரோன்களைபயன்படுத்தி மேற்கொள் ளும் இதர முக்கிய பயன்பாடுகளின் கட்டமைப்பை உருவாக்க உதவும் என்று கூறப்படுகிறது.இந்த தொலைதூர ட்ரோன்களின் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங் களை வரவேற்க, தொலைதூர பரிசோதனை மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு(பீம்) குழுவை மத்திய அரசு உருவாக்கியது.

இதற்கான விருப்ப மனு அறிவிப்பை  விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் 2019 மே 13 ஆம் தேதிவெளியிட்டது. பீம் குழு 34 விருப்ப மனுக்களை ஆய்வுசெய்து, தொலைதூர ட்ரோன் பரிசோதனை மேற்கொள்ள 20 நிறுவனங்களை தேர்வு செய்தது.இந்த அனுமதி, விருப்பமனு அறிவிப்பில் கூறப்பட்டதேவைகள், பீம் குழு பிறப்பித்த அல்லது பிறப்பிக்கும் உத்தரவுகள்/விலக்குகள் ஆகியவற்றை முழுமையாக பின்பற்றுவதற்கு உட்பட்டவையாகும். இந்த நிபந்தனையுடன் கூடிய அனுமதி ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கும் வரை இதில் எது முன்பாகவோ அதுவரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;