india

img

தேசியக்கொடியை அவமதித்த கோல்வால்கரை புகழ்ந்து டுவீட்டா? மத்திய கலாச்சாரத்துறைக்கு கண்டனம்....

புதுதில்லி:
ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரைப் புகழ்ந்து அவரின் பிறந்தநாளில் டுவீட் செய்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

கோல்வால்கர் பிறந்தநாளன்று, அவரை, மிகப்பெரிய சிந்தனையாளர், கல்வியாளர், மறக்கமுடியாத தலைவர் என்று  மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. “அவரின் சிந்தனைகள், கொள்கைகள் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கத்தையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கும்” எனவும் தெரிவித்திருந்தது. இந்த டுவிட்டர் பதிவு, பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்பிரஹலாத் படேலுக்கும் டேக் செய்யப்பட்டது.இந்நிலையில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் டுவிட்டர் கருத்துக்கு, காங்கிரஸ் மூத்தத் தலைவர் கவுரவ் கோகாய் தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடியின் தேர்வாகவே இந்த அமைச்சர் கொண்டு வரப்பட்டு கலாச்சாரத் துறைக்கு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே நபர்தான், நாடாளுமன்றத்தில் என்னிடம், ‘நாதுராம் கோட்சேவை வணங்குவதால் தவறு ஏதும் இல்லை’ எனத் தெரிவித்தார்” எனத் தெரிவித்தார்.

இதுபோல, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர்பதிவில், “மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் டுவிட்டர் கருத்தை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அவர்கள் குறிப்பிட்ட நபர் (கோல்வால்கர்)உண்மையில் பெரிய சிந்தனையாளர், கல்வியாளர் என நம்புகிறீர்களா? என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக, ‘ஒய்ஐஆம் ஏ இந்து’ நூலில், நான் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். இந்திய தேசியக் கொடியை அவமதித்தவரைத்தான் மத்திய அரசு புகழ்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

;