india

img

திக்விஜய் சிங், அகிலேஷ், குமாரசாமி, ஹர்சிம்ரத் கவுர் .... அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிப்பு.....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலின் இரண் டாவது அலை மற்றும் உருமாறிய கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுவரை இல்லாத வகையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 1200-ஐ நெருங்கி விட்டது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர்.பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன், உத்தரப் பிரதேசத்தின் சாமியார் முதல்வர் ஆதித்யநாத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா (இரண்டாவது முறையாக பாதிப்பு), திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப், காங்கிரஸ் தலைவர்கள் உம்மன்சாண்டி, திக் விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி, சிரோமணி அகாலிதளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், குஜராத் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சின்ஹ் சுதசமாஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.

;