india

img

டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டியது... 7 மாநிலங்களில் ‘சதமடித்து’ களத்தில் நிற்கும் பெட்ரோல் விலை...

 புதுதில்லி:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்முடியும் வரை பெட்ரோல் - டீசல் விலைகளை உயராமல் பார்த்துக் கொண்டமோடி அரசு, கடந்த மே 4-ஆம் தேதிக்குப் பின் மொத்தம் 24 முறை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி விட்டது.இதனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 100 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த பெட்ரோல் விலை கடந்த வாரம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக் யூனியன் பிரதேசம், கடைசியாக கர்நாடகம் என 7 மாநிலங்களில் ‘சதம்’ அடித்தது. கர்நாடகத்திலுள்ள பிதர், பெல்லாரி, கொப்பல், சிமோகா, சிக்மகளூர்ஆகிய இடங்களில் பெட்ரோல் விலை100 ரூபாயைக் கடந்தது. 

இதனிடையே ராஜஸ்தானில் டீசல்விலையும் 100 ரூபாயை தொட்டுள் ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லை அருகே இருக்கும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரில்தான் நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை100 ரூபாயைத் தாண்டியது. தற்போதுஅதே கங்கா நகரில்தான் டீசல் விலையும் முதன்முறையாக 100 ரூபாயைத் தாண்டி ‘சாதனை’ படைத்துள்ளது.திங்களன்று 24-ஆவது முறையாக- 29 காசுகள் முதல் 31 காசுகள் வரை-விலைஉயர்த்தப்பட்டதால், பெட்ரோல் - டீசல் விலை புதிய உச்சத்திற்குச் சென்றுள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் பெட்ரோல் விலை 107 ரூபாய் 53 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர்100 ரூபாய் 37 காசுகளாகவும் உயர்ந் துள்ளது. போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 104 ரூபாய் 85 காசுகளாகவும், ஜெய்ப்பூரில் 103 ரூபாய் 94 காசுகளாகவும், மும்பையில் 102 ரூபாய் 58 காசுகளாகவும், ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 102 ரூபாய் 88 காசுகளாகவும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 100 ரூபாய் 35 காசுகளாகவும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 101 ரூபாய் 77 காசுகளாகவும், லடாக்கில் 102 ரூபாய் 71 காசுகளாகவும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

;