india

img

அரசை விமர்சிக்கும் பதிவுகளை நீக்க   மத்திய அரசு நிர்ப்பந்தம்....

புதுதில்லி:
கொரோனா தொற்று இரண்டாவது அலை குறித்துஅரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு போதுமான உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் இறந்துவருவதாக அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள்கொந்தளிப்புடன் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணம் என டிவிட்டர், பேஸ்புக்உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனம்வெளியிட்டுள்ள தகவலின்படி,  பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் கொரோனா தொற்றுகுறித்த தவறான தகவல் மற்றும் பயத்தை பரப்பும்வகையில் பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில், இந்திய அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தவறான தகவல் பரப்பியடுவிட்டர் கணக்காளர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். கணக்காளர்களின் விவரங்களை தர முடியாது” என்று தெரிவித்துள்ளது.

;