india

img

கொரோனா: குழந்தைகளை கவனத்துடன்  பாதுகாக்க அறிவுறுத்தல்...

புதுதில்லி:
இந்தியாவில் இந்தாண்டுமார்ச் மாதம் முதல் ஆகஸ்ட்மாதம் வரை குழந்தைகளை கொரோனா தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள் ளது. இதனால் குழந்தை களை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்த குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கூடுதல் பரிசோதனை இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. மூன்றாம் அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதிலிருந்து குழந்தைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும்  என்று எச்சரிக்கையுடன் கூறியுள்ளனர்.கொரோனா பரவல் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமை யில் மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்ட ஆலோச னை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தாக்கம்குறித்த தரவுகளைக்கொ ண்டு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப நாட்களில், கொரோனா பாதிப்பினால் குழந்தை கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதி கரித்துள்ளது.  இதற்குக் காரணம் முன்பை விட எச்சரிக்கைஉணர்வு அதிகமாகவுள்ளது அதே போல் பாதிக்கக்கூடியநிலையில் குழந்தைகள் இரு ப்பதும் அதிகரித்துள்ளது.செரோ சர்வேயின்படி குழந்தைகளில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 57-58 சதவீதமாக  இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. பெரியவர்கள் கொரோனாவினால் பாதிப்படைவது குறைவதால் குழந்தைகளை பாதிக்கின்றது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்  தெரிவித்துள்ளது.

;